Pages

Saturday, November 13, 2010

தமிழின் இனிமையே.....



என் அன்னையின்
முதல் வருடல் -
பருவத்தில் முதல்
காதல் - முகில்
விலகையில் நிலவு -
முழங்கால் வரையில்
தண்ணிர் - கல்லூரியின்
முதல் அழுகை -
காணமல் போன
கடல் அலைகள் -
கண்ணில் விழுந்த
முதல் மழைத்துளி -
காதலியின் முதல்
முத்தம் - தொடர
ஏங்கிய கனவுகள் -
தொலைக்க
நினைத்த
நினைவுகள் -
என்றுமே
நம்முடன்
அதுபோல்தான் -
தமிழ்

Thursday, November 11, 2010

சார்லி சாப்ளின்!


உலகையே சிரிக்க வைத்தவர் சார்லி சாப்ளின்! ஆனால் அவரது வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததே இல்லை. பிறந்ததில் இருந்தே துன்பங்கள், அவமானங்கள், தோல்விகள்! 1889-ல்…லண்டன் நகரில் சாப்ளின் பிறந்து ஓரிரு வருடங்களிலேயே பெற்றோரிடையே சண்டை வந்து விவாகரத்து அகிவிடவே, பேசத் தொடங்கும் முன்பே, தாயுடன் சேர்ந்து மேடையில் பாட வேண்டிய நிர்பந்தம். ஐந்து வயதுச் சிறுவனின் பாட்டுக்குக் கிடைத்த அமோக வரவேற்பு, ஏழு வயதிலேயே பறிபோனது. காரணம், அவரது தாயாரின் மனநிலை பாதிக்கப்பட்டதுதான். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக முடிதிருத்தும் நிலையம், கண்ணாடித் தொழிற்சாலை, மருத்துவமனை என எங்கெங்கோ வேலைபார்த்தவர் சில காலம் தந்தையுடன் சேர்ந்து மேடை நாடகங்களிலும் நடித்தார். ஆனால் தந்தை திடீரென இறந்துவிடவே, மீண்டும் தொய்வு! 1910ல்…நாடகக் குழுவினருடன் அமெரிக்கா சென்றவருக்கு குறும்படங்கலில் நல்ல பெயர் கிடைத்தது. அவரது முத்திரை நடிப்பான ‘டிராம்ப்’ (பேகி பேண்ட், தொப்பி, கைத்தடி, வளைந்த கால்கள்) பிரபலமானது. ‘தி கிட்’ படத்தில் தொடங்கிய வரவேற்பு ‘தி கிரேட் டிக்டேட்டர்’ வரை நீடித்தது. ஆனால், இந்த காலகட்டங்களில் குடும்ப வாழ்வு அவரை பாடாய்ப் படுத்தியது. 1911-ல் நடந்த முதல் திருமணம் இரண்டு வருடம் மட்டுமே நீடித்தது. அதற்கு பின் நடந்த இரண்டு திருமணங்களும் கூட சாப்ளினுக்கு சோகத்தை மட்டுமே கொடுத்தன. 1920-ல் நான்காவது மனைவியாக ஓ ரெய்ல் அமைந்தபின் இல்லறத் தொல்லைகள் நின்றன. 1945-ம் ஆண்டு சாப்ளின் ஒரு கம்யூனிஸ்ட் தீவிரவாதி என அமெரிக்க அரசு குற்றம் சாட்டியது. இரண்டாவது மனைவி ஜோன் பெர்ரியும் சாப்ளின் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருந்தார். அவர் தரப்பு நியாயங்களை அமெரிக்க அரசு கேட்காததால், வேறு வழியின்றி, 1952-ல் கனத்த இதயத்துடன் சுவிட்சர்லாந்தில் அடைக்கலமானார் சாப்ளின். 1972-ல்… காலச் சக்கரம் சுழல, அதே அமெரிக்க அரசு, ‘உலகின் தலைச்சிறந்த நகைச்சுவை நடிகர்’ விருதுபெற சாப்ளினை அழைத்தது. பரிசினை ஏற்றுக் கொண்டாலும், அமெரிக்காவில் தங்க விருப்பமின்றி, மீண்டும் சுவிட்சர்லாந்து திரும்பினார். விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து நின்று, “வாழ்நாள் முழுவதும் போர்களமாக இருந்தாலும் எப்படி ஜெயித்தீர்கள்? அது என்ன ரகசியம்?” எனக் கேட்டார்கள். சாப்ளின் சிரித்தார், “இந்த நிலை மாறிவிடும்” என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை.

கப்பல்...

மழை
வரும்போது
குழந்தைகள்
காகித கப்பல்
விடுகிறார்கள்
பெரியவர்கள்
கப்பல் கவிழ்ந்த
சோகத்தில்
மிதக்கிறார்கள்....!

தந்தது இரவு....

கை நிறைய
மௌனத்தை அள்ளி
இரவின் முகத்தில்
வீசினேன்.
இருளை - ஒரு
கோப்பைத் தேநீராக்கி
பருகச் சொல்லித் தந்தது
இரவு.

மழையோடு ஒரு நேர்முகம்.....


எப்போதாவது மண்ணைத் தொடும் மழையோடு ஒரு நேர்முகம்: -

தாங்கள் எப்போதாவதுதான் மண்ணைத் தொடுகிறீர்கள், உண்மைதானே?
ஆம்! எனை வரவேற்க மரங்களில்லை என்ற கோபம்தான்!

உங்கள் பொழுதுபோக்கு?
சுகமாய் மேகக் கூட்டங்களோடு சுற்றித் திரிவது!

உங்களுக்குப் பிடித்த விளையாட்டு?
மாடிவீடோ குடிசைவீடோ பல்லாங்குழிதான் எனக்குப் பிடித்த விளையாட்டு!

உங்கள் சந்தோஷம் எப்பொழுது?
புதிதாய் மலர்ந்த மலரினைத் தழுவும்போது!

உங்கள் துக்கம்?
கூரை கலைந்த குடிசைக்குள் நுழையும் போது.

எப்போதும் வேலையோ?
இல்லை! இடையிடையே
இலைகளில் இளைப்பாறிவிட்டுத்தான்
பூமியையே தொடுகிறேன்!

சரி! மண்வாசம் பற்றி ஏதேனும் கூறுங்கள்!
அது மழைக்கான வரவேற்பு!
மணமகளாய் மண்ணைத் தொடும் மழைக்கு சிற்சில "பாக்டீரியாக்கள்" தெளிக்கும் பன்னீர்!

வானவில்?
அவன்
என்னைக்
காதலிப்பவன்!

அப்படியானால் பூமி?
எனக்கும் பூமிக்குமான
நிச்சயதார்த்தம் அவனுக்குத் தெரியாது.

பிறகு / வானவில்?
எனைக் கவரவே
வர்ணம் உடுத்துகிறான்
கரைத்துப் பார்க்கிறேன் முடியவில்லை.

அப்படியா?
ஆம்! நீங்கள் கவிதையில் மட்டுமே வானை வளைப்பீர்கள்!
அவன் எனக்காக தன்னையே வளைத்து நிற்கிறான்!

இடியைப் பற்றி?
அது மேகங்களுக்கிடையிலான பஞ்சாயத்து! / யார் முதலில்
துளியாய் மாறுவதென
மேகங்களுக்குள்ளான பஞ்சாயத்து!

மின்னல்?
பஞ்சாயத்திற்கான வான வேடிக்கை!

மொத்தத்தில் பூமி!
என் காதலன்
எனையூற்றிக் கொண்டு கவியெழுதும் கவிஞன்!

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை - எனில் யார் யார் அந்த நல்லார்?
இரவல் முகந்தொலைத்தவன்
சுயநலம் விற்றவன்
மனிதத்தை நேசிப்பவன்
இவர்களைக் கழித்தால்
இரு வகையுண்டு.
ஒருவகை குழந்தைகள்; மற்றொன்று மனவளர்ச்சியில்லாதவர்கள்!

ஏன் இவர்கள் மட்டும், நாங்கள்?
இவர்களில் இரவல் முகமில்லை!
உங்களில்?
இவர்களில் சுயநலத்தின் சாயலில்லை!
உங்களில்?

சரி! இறுதியாய் மனிதர்களான எங்களைப் பற்றி ஏதேனும் கூறுங்கள்?
மன்னிக்கவும்! கருத்துகூற விரும்பவில்லை.

Sunday, October 24, 2010

என்னுள் மழைக்காலம்..!


என்னவளுடன் கைகோர்த்து நனைந்தேன் மழையில்...!!
மழை நின்றபின்னும் என்னுள் மழைக்காலம்..!
மின்னலாய் என்னவள்.......!!!

Saturday, October 23, 2010

காதல்மழை.!


விரல்கள் கோர்த்து
மெளனித்து நடக்கிறோம்.
விரல்களின் ஸ்பரிசத்தில்
வலுக்கிறது காதல்மழை.!!!

Sunday, October 17, 2010

நீ அழகாயிருக்கிறாய்.....

''நீ அழகாயிருக்கிறாய்''
அடிகடி சொல்லும் உன் பொய்யை நம்பாவிட்டாலும் கூட ரசிக்கிறேன்..!!

மௌனம்....


மௌனம் கூட மொழியாகி
போனது உன்னை கண்ட
பின்பு தான்.!!

அழகான கவிதை.....


கடற்கரையில் உன் பெயரை எழுதினேன் கடல் அலை வந்து அள்ளிச் சென்றது அழகான கவிதை என்று

உன்னால்....


நான் நானாக இருப்பதும் உன்னால் தான் நான் நானாக இல்லாமல் இருப்பதும் உன்னால் தான்!!!!

நினைவுகள்....


நினைவுகள் நீங்காது - நீ
நித்தமும் நினைவில் நிரந்தரமாக
நிலைக்க வேண்டும் - BUT
உன் நினைவை மட்டும்
எனக்கு சொந்தமாக்கி விடாதே.!

தனிமைகள் தினமும்....

விழிகள் இரண்டும் - இன்று
இரவுகளை வெறுத்தன
விரல்களிற்க்குள் பேனாக்கள்
விருப்பமாக இருந்தன
தனிமைகள் தினமும்....

Saturday, October 16, 2010

காணவில்லை.....


என் உதடுகளைக் காணவில்லை
உனக்கு முத்தமிடுகையில்தான்
தொலைத்திருக்க வேண்டும்..!!

Wednesday, September 1, 2010

நாமும் காதல் கொண்டோம்....!


நிழல் போல நீளும் இரவில்..
நம்முடன் இருக்கும் வான் நிலவே!
நீ வாராத ஓர் நாளில்..
நாமும் காதல் கொண்டோம் !
நட்சத்திரங்களோடு.

Sunday, August 29, 2010

முடிந்த இரவு..


பாதி தூக்கம் கண்ணிலிருக்கும்
உன் ஈரக்கூந்தல் என் இமை திறக்கும்
தேவதை உன் கையில் தேநீர் கோப்பை
தேடுது மனசு மீண்டும் கடந்த இரவை...

Saturday, August 28, 2010

கிழித்தெறிகிறேன்..!


என் நாட்குறிப்பின் பக்கங்களிலிருந்து கிழித்தெறிகிறேன் ..!
உன்னுடன்பேசாத நாட்களை..!

தொடர்கதையாக...

நீ படித்த
என் கவிதைகளோ
சிறுகதையாக
என்னுள் புதையுண்டுப்போன
படிக்காத கவிதைகளோ
தொடர்கதையாக......

என்னிடமே..!


உன் கண்களின் தேடல்கள்
என்னிடமே !
என் இதழின் புன்னகைகள்
உன்னிடமே !
உன் நினைவுகளின் உறைவிடம்
என்னிடமே !
என் கனவுகளின் நிறைவிடம்
உன்னிடமே !
மொத்தத்தில்
நீ... நீயாக இருப்பதும்
என்னிடமே !
நான்... நானாக இல்லாமல் போவதும்
உன்னிடமே !

உறவுகளின் உன்னதம்...

1000 பேர் பார்த்தாலும் உன்
பார்வை மட்டும் உயிரையும்
ஊடுருவிப்பார்க்கிறதே...
அதுதாங்க உறவுகளின்
உன்னதம்.

விழிகள்........


விழிகள் நட்சத்திரங்களை
வருடினாலும்
விரல்களென்னவோ
ஜன்னல் கம்பிகளோடுதான்....

நிஜங்களின் போராட்டமே..

நினைத்துப் பார்த்தாயா?
கனவுகளை நான் வெறுக்கிறேன்
அவை எத்தனை
அழகாக இருந்தாலும்!
நிழல்களின் ஒப்பந்தங்களைவிட
நிஜங்களின் போராட்டமே.....

ஒரே ஒருமுறை...



*எத்தனை பாராட்டுக் கிடைத்தாலும்*
*இதயம் நிறைவுபெற மறுக்கிறது.*
*ஒரே ஒருமுறை உன்*
*கண்களால் என்னை*
*கெளரவிக்க மாட்டாயா?*

என் ஆசைகள்..

நிலவைப் பார்வையிடும்
நட்சத்திரங்களைப் போல்
அணைந்தணைந்து எரியும் என்
ஆசைகள் உன்னைப்
பார்வையிடுகின்றன......!!

அனுமதி இல்லை என்று......


என் இதயத்தில் எழுதிவைத்தேன்
"அனுமதி இல்லை என்று"
ஆனாலும் அவளின் நினைவுகள் உள்ளே வந்து சொன்னது
"எனக்கு படிக்க தெரியாது என்று"

குடை பிடிப்தில்லை....!


மழைக்கு எந்த மலர்களும் குடை பிடிப்தில்லை....!
உன்னை தவிர..

Saturday, August 21, 2010

நம் காதலின்.....:(...


நீ வெட்கப்பட்டு வேண்டாமென்று சொன்ன அந்த முதல் முத்தத்தை இன்னும் சேமித்து வைத்திருக்கிறேன் நம் காதலின் முதல் புனித சின்னமாய்.

kaadhal roajaavae engae nee engae....:(....

kaadhal roajaavae engae nee engae
kanneer vazhiyudhadi kannae
kannukkul needhaan kanneeril needhaan
kanmoodip paarththaal nenjukkul needhaan
ennaanadhoa aedhaanadhoa sol sol
(kaadhal)
thenral ennaith theendinaal saelai theendum njaabagam
chinnap pookkal paarkkaiyil dhaegam paarththa njaabagam
velli oadai paesinaal sonna vaarththai njaabagam
dhaegam rendum saergaiyil moagam konda njaabagam
vaayillaamal poanaal vaarththai illai kannae
neeyillaamal poanaal vaazhkkai illai kannae
mulloadudhaan muththangalaa sol sol
(kaadhal)
veesuginra thenralae vaelai illai inru poa
paesuginra vennilaa penmai illai oayndhu poa
poo valarththa thoattamae koondhal illai thaeindhu poa
boomi paarkkum vaanamae pulliyaagath thaeindhu poa
paavai illai paavai thaevai enna thaevai
jeevan poana pinnae saevai enna saevai
mulloadudhaan muththangalaa sol sol
(kaadhal)

Kadhal Solla Vandhen Movie Song Lyrics - Oh Shala Lyrics


O Shala O Shala Kaadhalin Naalin Naalu Ketpen
O Shala O Shala Vaazhkkaiyin Thoazhi Naanum Paarthen
Kalloori Koayilaa Dhevadhai Vaasalaa
Un Moochu Kaatru Pattadhaaley
En Kaalgal Parandhuppoagum Maeley
Oh Ho Ho Ho

Gudhitheney Guzhiyaagavey Boomi Poovai Poala Aanadhey
Kadal Vaanam Adhu Yaavumey Nirammaarudhey
Asaiyaamal Unai Paarkkiren
Pergal Kaaladiyil Poothadhey
Sedhukkaamal Silaiyaaginen Ada Naanumey

Question Aai Poanaval Answer Aai Varugiraal
Kalloori Kaalam Meenu Aandu
Unnoadu Vaazhavendum Neendu
O O O Leyley Leyley Leyley
Mudhal Thooral Adhil Kaayavey
Jenmam Nooril Thuli Aagumey
Maru Thooral Madhiyaanamey Gnaayamaa
Thalaikoadhi Aval Saappida
Sidharaadho Oru Saadhamey Yenginen

Oh Shala Oh Shala Kaadhalin Naalin Naalu Ketpen
O Shala O Shala Vaazhkkaiyin Thoazhi Naanum Paarthen

Arugey Nee Amarndhaayadi
Thoalum Thoalum Kadhai Pesudhey
Urasaadhey Uyir Koaburam Saayudhey
Azhagaana Oru Oorvalalm
Neeyum Naanum Serndhu Poavadhen
Perundhey Kula Saamiyaai Aanadhey
Perundhin Puzhudhiyum Pookkalaai Maarudhey
Urchaagam Melum Melum Aera
Androdum Megamaaga Maara
Leyley Leyley Leyley

Friday, May 21, 2010

L♥VE


"உலகம் முழுவதும் பழசு
இனி நம் காதல் தானடி புதுசு"

Thursday, May 20, 2010

இது போதும்....


சின்னதாய் ஒரு புன்னகை
மென்மையாய் ஒரு பார்வை
இது போதும்
நட்பு உரசிக் கொள்ள...

மறக்க முடியாத துயரம்
போகத் துடிக்கும் உயரம்
இது போதும்
நட்பு பேசிக் கொள்ள...

ஆக்கப்பூர்வ விமர்சனம்
ஆழமான ஆலோசனை
இது போதும்
நட்பு நலமாய் நடந்து செல்ல...

சின்ன சின்ன சண்டை
செல்ல செல்ல கோபம்
இது போதும்
நட்பை உணர்ந்து கொள்ள...

எப்போது இந்த எல்லைக்குள்வருவாய்?
எல்லையில்லா நட்பைத் தருவாய்?
காத்திருக்கிறேன்
காற்றினூடே.....

என் வார்த்தைகளுக்கே
விளக்கம் கேட்கும்
பலருக்கு மத்தியில்
என் மௌனத்தையும் மொழிபெயர்க்க
உனக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது.

Wednesday, May 19, 2010

கைக்கூ...

*பூங்காவில் ஒரு
நேர்காணல்...
மலர்களோடு..!

*வானத்துக்குள் பிரவேசித்த
இன்ப வெள்ளத்தில்......
ஊஞ்சல் சிறுமி.........!

தந்துவிட்டேன்...


என் இதயச்
சுமைகளை
இறக்கி வைக்க
நினைத்தேன் -அதுதான்
தந்துவிட்டேன் - என்
இதயத்தை
உன்னிடமே....